News June 15, 2024
சாத்தான்குளம் பகுதியில் வேலை செய்யாத TACTV கேபிள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், செட்டிகுளம், நொச்சிக்குளம், கொம்பன்குளம், முதலூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் தற்போது வரை டேக் டிவி கேபிள் வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் பொழுதுபோக்கான டிவியை பார்க்க முடியாமல் மிகுந்த அவதியுற்று வருகின்றனர்.
Similar News
News March 10, 2026
தூத்துக்குடி: இனி WHATSAPP-ல்.. பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ்!

தூத்துக்குடி மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.
News March 10, 2026
தூத்துக்குடி: ரேஷன் கடைக்கு போக வேண்டாம்! இந்த நம்பர் போதும்!

தூத்துக்குடி மாவட்ட மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
News March 10, 2026
தூத்துக்குடி: பெண்களுக்கு பாதுகாப்பில்லை – சௌமியா

தூத்துக்குடி விமான நிலையத்தில் சௌமியா அன்புமணி (பாமக) செய்தியார்களை சந்தித்தார். அதில், பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் தான் தமிழகத்தில் நிலவுகிறது. 2 வயது குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. முன்பு பெரியவர்கள் தான் இந்த பாலியல் குற்றங்களில் ஈடுபட்டனர். இப்போது சிறுவர்கள் கூட இக்குற்றத்தில் ஈடுபடும் அவலநிலை நிலவுகிறது என அவர் தெரிவித்தார்.


