News June 15, 2024
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காதல் திருமணத்திற்கு ஆதரவாக இருந்ததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்ட குழு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்து இன்று கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாநகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மருதவாணன், கருப்பையன், ஆளவந்தார், பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 5, 2026
கடலூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விபரம்

கடலூர், காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (மார்.4) இரவு 10 மணி முதல் நாளை (மார்.5) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
வைக்கோல் எடுத்துச் சென்ற வாகனம் தீப்பிடித்து எறிந்தது

விருத்தாசலம் அருகே உள்ள கட்சிபெருமாநத்தைச் சேர்ந்த சிவ சங்கரமூர்த்தி (41) என்பவர் தன்னுடைய ஈச்சர் டிராக்டர் வாகனத்தில் (மார்ச்.4) வைக்கோல் ஏற்றி சென்று கொண்டிருந்தார்.
மேமாத்தூர் அருகே செல்லும்போது திடீரென எதிர்பாராத விதமாக வைக்கோல் தீப்பிடித்து எறிந்ததில் வாகனம் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 4, 2026
கடலூர்: எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

கடலூர் மாவட்டம் காவல் அலுவலத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் தலைமையில், இன்று(மார்.4) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமாரிடம் பொதுமக்கள் புகார் மனுக்கள் அளித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலகள் தீர்வு காண உத்தரவிட்டார்.


