News June 15, 2024
e-KYC என்றால் என்ன?

அரசு சலுகைகள், சிலிண்டர் இணைப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு e-KYC கட்டாயம். e-KYC என்பது காகிதமற்ற KYC (Know Your Customer) என்று அழைக்கப்படுகிறது. இது வாடிக்கையாளரின் நற்சான்றிதழ்களை மின்னணு முறையில் சரிபார்க்கும் செயல்முறையாகும். எந்தவொரு நிதி நிறுவனத்திலிருந்தும் சேவைகளைப் பெற அனைவருக்கும் இது கட்டாயமாகும். இந்த e-KYC பதிவு செய்யாதவர்களால் அரசின் சில சலுகைகளை தொடர்ந்து பெற முடியாது.
Similar News
News March 24, 2026
திருச்சி: ₹.15.67 லட்சம் விடுவிப்பு

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திவரும் தீவிர வாகன சோதனையில், இன்று (மார்ச்.24) மாலை வரை ₹.39,07,420 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ₹.15,67,330 திரும்ப விடுவிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ₹.23,40,090 கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News March 24, 2026
நாடு முழுவதும் லாக் டவுன்.. இந்த நாள் ஞாபகம் இருக்கா?

வெளியூரில் தங்கி வேலை பார்த்து கொண்டிருந்தோர் சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகினர். 3 மாதங்களுக்கு தேவையான பலசரக்குகளை வாங்க கடைகள் முன் மக்கள் குவிந்தனர். ஏனென்றால், ‘நாடு முழுவதும் லாக் டவுன்’ என PM மோடி, 2020-ல் இதே நாளில் தான் அறிவித்தார். இந்நிலையில், போர் பதற்றம் காரணமாக தற்போது நிலவும் கேஸ் தட்டுப்பாட்டால் மீண்டும் லாக் டவுன் வருமோ என்று பலரும் கருத்துகளை SM-ல் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
News March 24, 2026
வெயில்ல போகலனாலும் முகம் கருக்குதா? இதுதான் காரணம்

➤PCOS, தைராய்டால் ஹார்மோன் மாற்றம் ➤செல்கள் இறப்பால் பிக்மண்டேஷன் ➤மன அழுத்தம், தூக்கமின்மை ➤வைட்டமின் B12, C, E குறைபாடு ➤நீரிழிவு நோய் ➤போனில் இருந்து வெளியாகும் Blue light ➤சருமப் பராமரிப்பு பொருள்களால் ஏற்படும் பக்கவிளைவுகள் காரணமாக முகம் கருப்பாகலாம். முகம் பளபளப்பு பெற வெறும் கிரீம்களை மட்டும் பயன்படுத்தாமல், டாக்டரிடம் சென்று மேலே குறிப்பிட்டிருக்கும் பிரச்னைகளை சரிசெய்யுங்கள். SHARE.


