News June 15, 2024
புதுச்சேரியில் நாளை 7 மையங்களில் சிவில் சர்வீஸ் தேர்வு

புதுச்சேரி நிர்வாக சீர்த்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு நாளை 16 ஆம் தேதி காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரையிலும் மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் இரு வேளையும் நடக்க உள்ளது. புதுச்சேரியில் 7 மையங்களில் நடக்க உள்ளது. இதில், 2578 பேர் தேர்வு எழுத உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
புதுச்சேரியில் நிதியுதவி வழங்க அரசு உத்தரவு

புதுச்சேரியில் மகளிருக்கான மாதாந்திர நிதியுதவித் தொகை முன்கூட்டியே வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கான தொகையை சேர்த்து மொத்தம் ரூ.5,000 வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அறிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
News March 5, 2026
புதுச்சேரி: இட ஒதுக்கீடு கோரி ஆளுநரிடம் மனு

புதுச்சேரி மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ராம்குமார் தலைமையில், செயலாளர் புருஷோத்தமன் மற்றும் மத்திய அரசின் விருதாளர் ஆதவன் ஆகியோர் புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் அவர்களை நேரில் சந்தித்தனர். பழங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான இலவச மனைப்பட்டா மற்றும் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு ஆகியவற்றை வழங்கக் கோரி இந்த சந்திப்பின் போது அவர்கள் மனு அளித்தனர்.
News March 5, 2026
புதுவை: மெடிக்கலில் மாத்திரை வாங்குவோர் கவனத்திற்கு!

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!


