News June 15, 2024
தமிழக வனத்துறை புதிய சாதனை

ஆமைகளின் எண்ணிக்கையை உயர்த்தி தமிழ்நாடு வனத்துறை சாதனை படைத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த ஆண்டு 1.82 லட்சம் ஆமைக் குஞ்சுகள் கடலுக்குள் விடப்பட்ட நிலையில், நடப்பாண்டில் அதன் எண்ணிக்கை 2.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றில், கடலுக்குள் ஆமைகள் விடப்பட்டது தொடர்பாக இதுவரை பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையில் இதுவே அதிகபட்சம் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள்: EPS

அதிமுக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளதாக EPS தெரிவித்துள்ளார். மேலும் அவர், சசிகலாவின் கட்சி அதிமுக கூட்டணிக்கு வருவது குறித்து அமித்ஷாவுடன் ஆலோசிக்கப்பட்டதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் தற்போதைய அரசியல் சூழல், தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
News March 3, 2026
‘கூட்டணியிலிருந்து விலகுங்கள்’.. மதிமுகவில் குமுறல்

2021-ல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக 4-ல் வெற்றிபெற்றது. இம்முறை ECI-ன் அங்கீகாரத்தை மீண்டும் பெற 12 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட், தனி சின்னம் கோரிக்கைகளை வைகோ முன்வைத்ததாக தெரிகிறது. ஆனால், உதயசூரியன் என்றால் 4, தனி சின்னம் என்றால் 3 தொகுதிகள் என திமுக சொல்லிவிட்டதாம். இதை ஏற்க முடியாத <<19223088>>மதிமுக <<>>தொண்டர்கள் சிலர், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுங்கள் என வைகோவிடம் கூறியுள்ளார்களாம்.
News March 3, 2026
மார்ச் 6-ல் அதிமுக தொகுதிப்பங்கீடு அறிவிப்பா?

யாருக்கு ராஜ்யசபா எம்பி பதவியை வழங்குவது, தொகுதிப்பங்கீடு உள்ளிட்டவை குறித்து நாளை அதிமுக மா.செ.க்களின் கருத்துகளை EPS கேட்கவிருக்கிறார். ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 5-ம் தேதியுடன் முடியும் நிலையில், யாருக்கு MP பதவி வழங்குவது என 4-ம் தேதி அறிவிக்கவிருப்பதாகவும், மார்ச் 6-ம் தேதி தொகுதிப்பங்கீட்டு பட்டியல் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.


