News June 15, 2024

கிரெடிட் கார்டுகளுக்கு ரிவார்டு புள்ளியை நிறுத்திய SBI

image

குறிப்பிட்ட சில கிரெடிட் கார்டுகளுக்கு ரிவார்டு புள்ளிகள் வழங்குவதை இன்று முதல் SBI வங்கி நிறுத்தியுள்ளது. Merchant Category Codes (MCC) 9399 மற்றும் 9311 கீழ் வரும் அரசாங்கம் தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு இது அமலாகியுள்ளது. குறிப்பாக, ஏர் இந்தியா எஸ்பிஐ பிளாட்டினம், யாத்ரா எஸ்பிஐ உள்பட 22 வகையான கார்டுகளுக்கு ரிவார்டு புள்ளிகள் இனிமேல் வழங்கப்படாது என SBI வங்கி அறிவித்துள்ளது.

Similar News

News November 13, 2025

கடலூர்: பஸ் மோதி பரிதாப பலி

image

பண்ருட்டி அடுத்த பட்டாம்பாக்கத்தில் இருந்து அண்ணாகிராமம் செல்லும் சாலையில் கடந்த நவ.5-ம் தேதி, சாலையோரம் நடந்து சென்ற அடையாளம் தெரியாத நபர் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த நபர், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 13, 2025

ஜனவரிக்கு பிறகே கூட்டணி முடிவு: கட்சிகள் திட்டம் என்ன?

image

பாமக, தேமுதிக, அமமுக, தவாக, புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் ஜனவரியில் கூட்டணி முடிவை அறிவிக்க உள்ளதாக கூறியுள்ளன. அதன் பின்னணியில், மக்களின் ‘Pulse’ அறிய நடந்து வரும் சர்வேக்கள் உள்ளன என்பது தெரியவந்துள்ளது. யாருடன் கூட்டணி வைக்க வேண்டும், எந்தக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்பதை டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க இந்த கட்சிகள் தயாராகி வருகின்றன.

News November 13, 2025

Business 360°: ₹4,300 கோடி ஊழல்: TRIL நிறுவனத்துக்கு தடை

image

*நைஜீரியாவில் ₹4,300 கோடி ஊழல் குற்றச்சாட்டு சிக்கியுள்ள இந்தியாவின் TRIL நிறுவனத்திற்கு உலக வங்கி தடை. *தேசிய பங்குச்சந்தை NIFTY-யின் நிகர லாபம் 61% அதிகரித்து ₹557 கோடியாக உயர்வு. *நாட்டின் சில்லறை பணவீக்கம் 0.25% குறைந்தது. *ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கடன் பெற விண்ணப்பிக்க JanSamarth இணையதளம் தொடக்கம். *ஜப்பானில் இந்திய ஜவுளி கண்காட்சி தொடங்குவதால், திருப்பூருக்கு ஆர்டர் வர வாய்ப்பு.

error: Content is protected !!