News June 15, 2024
அனுமதியின்றி பயணம் செய்தால் உடனடியாக அபராதம்

ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் உரிய அனுமதியின்றி பயணம் செய்வோருக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. விரைவு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் அனுமதியில்லாதவர்கள் பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. அண்மையில் முன்பதிவு செய்த பயணிகள், அதிக கூட்டத்தால் ரயிலை தவறவிட்ட சம்பவத்தை தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 12, 2025
ஆச்சரியம் ஆனால் உண்மை..!

நம்மைச் சுற்றி ஏராளமான ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன. இயற்கையின் அதிசயங்களும், அறிவியலின் உண்மைகளும் பின்னிப் பிணைந்ததுதான் இந்த பூமி. இவற்றை நாம் அறியும் போது, அவை நமக்கு பல விதமான உணர்வுகளை தருகின்றன. அந்தவகையில், விநோதமாக தோன்றும் அதே சமயத்தில் அறிவியல் உண்மையாகவும் இருக்கும் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். மேலே Swipe செய்து அதை அறிந்து கொள்ளுங்கள்.
News September 12, 2025
முகூர்த்த நாள், விடுமுறை.. 3 நாள் ஸ்பெஷல் அறிவிப்பு

வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு பொதுமக்கள் ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, இன்று முதல் 980 ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று, நாளை, ஞாயிறு நாள்களில் சென்னையில் இருந்தும், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் புக் பண்ணலாம். SHARE IT.
News September 12, 2025
நேபாளில் சிக்கிய இந்தியர்கள் என்ன ஆனார்கள்?

நேபாளில் சிக்கி தவித்த 140 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும், பல இந்தியர்கள் எல்லை வழியாக நாட்டிற்குள் வந்துள்ளனர். அதேபோல், அந்நாட்டில் சிக்கித் தவித்த இந்திய வாலிபால் அணி, இந்திய தூதரகத்தால் மீட்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியர்கள் யாரேனும் சிக்கியிருந்தால், அவர்களையும் பத்திரமாக மீட்டுக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.