News June 15, 2024
நெல்லை: மிளகாய் பொடி தூவி தாலி செயின் பறிப்பு

நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிக்குளம் அருகே இன்று(ஜூன் 15) வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவி தாலி செயினை பறித்து சென்றுள்ளனர். சிறில் என்பவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் அவரது மனைவியை கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் மீது மிளகாய் பொடி தூவி 9 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். வள்ளியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி வீடியோக்களை ஆராய்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 9, 2025
நகைக்காக மூதாட்டி வீடு புகுந்து கொலை

வள்ளியூர் மின்வாரிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி(66). இவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மகன் பாலசுந்தர் இவருக்கு நேற்று காலை உணவு கொடுக்க சென்ற போது ருக்மணி தலையில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்சியடைந்தார். இதில் அவர் கழுத்தில் இருந்த 7 பவுன் செயின், 7 பவுன் வளையல் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
News July 9, 2025
கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு

நெல்லை மாவட்டம், ராதாபுரம் தீயணைப்புத்துறை எல்கைக்கு உட்பட்ட வடக்கன்குளம் சிஎம்எஸ் சிறுவர் இல்லத்தில் பின்புறம் உள்ள கிணற்றில் நேற்று பள்ளி மாணவன் சேர்மதுரை என்பவர் விழுந்துள்ளர். தீயணைப்புத்துறை அங்கு சென்றபோது சிறுவன் கிணற்றில் மூழ்கிய நிலையில் இருந்தார். சிறுவனை இறந்த நிலையில் மீட்டு காவல்துறை வசம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News July 8, 2025
வீரவநல்லூரில் இளம்பெண் வெட்டிக்கொலை

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே இளம்பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர கொலை தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தகாத உறவு காரணமாக இந்த படுகொலை நடந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.