News June 15, 2024
தஞ்சை: மின்சாரம் தாக்கி முதியவர் பலி

திருவாரூரை சேர்ந்த ராமையன் (60), ஒரத்தநாடு அருகே பொன்னாப்பூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது மின்சார வாரிய ஊழியர்கள் மரத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தனர். அதனால் அங்கு அவிழ்ந்து கிடந்த மின் கம்பி இருசக்கர வாகனத்தில் சிக்கி ராமையன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், படுகாயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News March 2, 2026
தஞ்சை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

தஞ்சை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News March 2, 2026
தஞ்சை: மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ

தமிழகத்தில் இன்று (02.03.2026) 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குவதை முன்னிட்டு, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கடின உழைப்பு நிச்சயம் பலன் தரும் என்றும், தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறவும் அவர் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
News March 2, 2026
தஞ்சாவூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான, மார்ச் மாத ரேஷன் பொருட்கள், இன்று மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில், நேரடியாக வீடுகளுக்கே வந்து விநியோகம் செய்யப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். அதன்படி மாவட்டத்தில் உள்ள 1,183 நியாய விலைக் கடைகள் மூலம் 48,817 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.


