News June 15, 2024
BREAKING: இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக, நாதக, பாமக ஆகிய கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில், இபிஎஸ்ஸின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
Similar News
News March 2, 2026
விழுப்புரம் மக்களே லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை (04146-259216) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.
News March 2, 2026
தொப்புள் கொடியை தாயத்தில் அடைத்து வைப்பது ஏன்?

பிறந்த குழந்தைகளின் வயிற்றில் இருந்து காய்ந்து உதிரும் தொப்புள் கொடியை தாயத்தில் அடைத்து வைப்பார்கள். வளர்ந்த பிறகு ஏதேனும் நோய் தாக்கினால், அந்த தொப்புள் கொடியை பொடி செய்து கொடுத்தால், நோய் குணமாகும் என நம்பினர். தொப்புள் கொடி ரத்தத்தில் அதிகளவு மூலச்செல்கள் உள்ளன. நரம்பியல் கோளாறுகள், திசு சேதம் போன்ற நோய்களுக்கு தொப்புள் கொடியில் உள்ள ஸ்டெம் செல்கள் பயன்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
News March 2, 2026
பங்குச்சந்தை வீழ்ச்சி.. ₹8 லட்சம் கோடி இழப்பு!

இஸ்ரேல்- US- ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்கு சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று சென்செக்ஸ் 1,498 புள்ளிகளும், நிப்டி 455 புள்ளிகளும் வீழ்ந்தன. முதலீட்டு மதிப்பில் சுமார் ₹8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது. எண்ணெய் நிறுவனப் பங்குகள் 6% வரை சரிந்துள்ளன. ஆனால், பாதுகாப்பு துறை பங்குகள் மட்டும் 5% – 13% வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


