News June 15, 2024
ரவுடி பட்டியல் வழக்கில் டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவு

ரவுடி பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்கி உத்தரவிட கோரி, தூத்துக்குடி சிலுவைப்பட்டியைச் சேர்ந்த மாடசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். ரவுடி பட்டியல் தயாரிப்பில் நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என டிஜிபிக்கு எதிராக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News March 7, 2026
மதுப் பிரியர்களுக்கு அதிர்ச்சி

‘ஹெல்த் கான்ஷியஸ்’ என்ற பெயரில் சிலர் மதுவில் டயட் சோடாவை கலந்து குடிப்பார்கள். ஆனால், இது ஆபத்தை ஏற்படுத்தும் என ஓர் ஆய்வு எச்சரிக்கிறது. அதாவது, சாதாரண சோடாவை கலந்து குடிப்பவர்களை விட, டயட் சோடா கலந்து மது அருந்துவோரின் ரத்தத்தில் மிக விரைவாக ஆல்கஹால் கலந்து மிதமிஞ்சிய போதையை ஏற்படுத்தி விடுகிறதாம். டயட் சோடாவில் சர்க்கரை குறைவாக இருப்பதால், ரத்தம் விரைவாக ஆல்கஹாலை உறிஞ்சி விடுகிறதாம்.
News March 7, 2026
T20 WC: நாளை வருண் விளையாடுவாரா?

வருண் சக்ரவர்த்தி நாளை நியூசிலாந்துக்கு எதிரான பைனலில் விளையாடுவது சந்தேகம் என்று செய்திகள் வெளியாகின. இதுகுறித்து பேசிய கேப்டன் சூர்யகுமார், வருணின் ஃபார்ம் பற்றி தங்களுக்கு கவலையில்லை; நம்பர் 1 பவுலரான அவருக்கு அணியை எப்படி வெற்றி பெறச் செய்வது என்று தெரியும் என்று கூறினார். மேலும், லெவனில் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து நாளை தெரியவரும் என்றார்.
News March 7, 2026
மகளிருக்கு ₹5 லட்சம்.. ஜாக்பாட் தேர்தல் அறிவிப்பு

மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அடுக்கியுள்ளார். அதில் குறிப்பாக, மகளிர் சுய உதவிக்குழுகளில் உறுப்பினராக இருந்து MSME நிறுவனம் தொடங்குவோருக்கு ஆண்டுக்கு 5 லட்சம் வழங்கப்படும் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார். இது 100% மானியம் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார். மேலும், மகளிர் நலனுக்காக தனி இலாகா தொடங்கப்பட்டு தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும் விஜய் அறிவித்துள்ளார்.


