News June 15, 2024
UPI மூலம் 47% இந்தியர்களிடம் நூதன மோசடி

மக்கள் UPI மூலம் பணம் செலுத்தும் வழக்கத்தை அதிகரித்துக் கொண்டுள்ளனர். இதைப் பயன்படுத்தி ஒரு கும்பல், நூதன முறையில் 47% இந்தியர்களிடம் கைவரிசை காட்டியுள்ளது. UPI லிங்கை அனுப்பி அதை திறக்கும்படியோ, ஸ்கேன் செய்யும்படியோ அறிவுறுத்தும் இக்கும்பல், அதை நம்பி மக்கள் OTP அல்லது PIN விவரங்களைக் கொடுத்ததும், UPI மூலம் அவர்களது வங்கிக் கணக்கில் பணத்தை திருடியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
டெல்லி தாக்குதல் தீவிரவாதிகளின் சதி: USA

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என அமெரிக்க செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். தாக்குதல் குறித்து இந்தியா சிறப்பாக விசாரணை நடத்துவதாகவும், விரைவில் உண்மைகள் வெளிவரும் என்றும் கூறியுள்ளார். மேலும் மிகப்பெரிய சதித்திட்டம் இந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பதாக தெரிவித்த அவர், விசாரணையின் முடிவுக்காக தாங்கள் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 13, 2025
ரம்யா கிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்ட நிலையில், மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்துள்ளது.
News November 13, 2025
BIHAR RESULT: வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை

பிஹார் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (நவ.14) நடைபெற உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, தலைநகர் பாட்னாவில் நவ.16 வரை தேர்தல் நடத்தை விதிகளை நீட்டித்து ECI உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் முடிவடையும் வரை வெற்றி கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். நடத்தை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


