News June 15, 2024
தேசம் அருந்ததி ராயின் பக்கம் நிற்கும்: எம்பி சு.வெங்கடேசன்

சமூக செயல்பாட்டாளரும், எழுத்தாளருமான அருந்ததி ராய் மீது உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்ததற்கு எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கருத்தைக் கண்டு அஞ்சும் கோழைகளுக்கு அடக்கு முறையே ஆயுதம் என்றும், அடக்குமுறையை எதிர் கொள்ளும் கூர்மையான ஆயுதமே கருத்துரிமை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தேசம் அருந்ததி ராயின் பக்கம் நிற்கும் என்றும் சூளுரைத்துள்ளார்.
Similar News
News September 12, 2025
மோதும் உலக சாம்பியன்கள்: இது ஒரு வரலாற்று தருணம்!

செஸ் விளையாட்டில் ஆண்கள் உலக சாம்பியனான டி.குகேஷ், பெண்கள் உலக சாம்பியனான திவ்யா தேஷ்முக் இருவரும் இன்று கிராண்ட் ஸ்விஸ் போட்டியில் மோதுகின்றனர். இருவருக்கும் 19 வயது, இந்தியர்கள், தங்களை விட அதிக ரேட்டிங்கில் இருக்கும் வீரர்களை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனவர்கள் – இப்படி பல ஒற்றுமைகள் கொண்ட இரு மாபெரும் சாதனையாளர்கள் மோதும் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
News September 12, 2025
செல்போன் ரீசார்ஜ் 1 ஆண்டுக்கு இலவசம்? CLARITY

‘Narendra Modi Free Recharge Scheme’ திட்டத்தில் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன், BSNL என அனைத்து செல்போன் நெட்வொர்க்கிலும் ஓராண்டுக்கு இலவச ரீசார்ஜ் செய்யலாம் என தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம்(PIB FACTCHECK) விளக்கம் அளித்துள்ளது. இது வெறும் வதந்தி என்றும், மத்திய அரசின் திட்டங்களை myscheme.gov.in. இணையதளத்தில் செக் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.
News September 12, 2025
வெற்று விளம்பரங்களால் ஏமாற்றும் திமுக: விஜய் காட்டம்

மக்களை சந்திக்கும் பயணத்தில் எந்த அரசியல் தலைவருக்கும் விதிக்கப்படாத நிபந்தனைகள் தனக்கு விதிக்கப்பட்டுள்ளதாக விஜய் குற்றம்சாட்டினார். தனது பயணத்தில் தனது தொண்டர்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பை CM ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். வெற்று விளம்பரங்கள் மூலம் திமுக மக்களை ஏமாற்றுவதாக சாடிய விஜய், நாளை திருச்சியில் தனது எழுச்சி பயணம் தொடங்குவதாகவும் அறிக்கையில் தெரிவித்தார்.