News June 15, 2024
T20 WC: நடப்பு தொடரில் அதிகமுறை ஆல் அவுட்

T20 WCயில் நடப்பு ஆண்டில்தான் அதிக முறை நூறு ரன்களுக்கும் கீழ் எடுக்கப்பட்டுள்ளன. நடப்புத் தொடரில் இதுவரை 10 இன்னிங்ஸ்களில், 100 ரன்களுக்கும் கீழ் அணிகள் ஆட்டமிழந்துள்ளன. 2014, 2021 ஆம் ஆண்டுகளில் தலா 8 முறையும், 2010ல் 4 முறையும் 100 ரன்களுக்கும் கீழ் எடுத்து அணிகள் ஆட்டமிழந்துள்ளன. இந்த ஆண்டு SL 77, உகாண்டா 58, 40, 39, IRE 96, PNG 77, 95, NZ 75, NAM 72, ஓமன் 47 என அணிகள் ஆட்டமிழந்துள்ளன.
Similar News
News March 14, 2026
தமிழ்நாடு தேர்தல் தேதி.. வெளியானது UPDATE

TN உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க நாளை வரை ECI அவகாசம் வழங்கியுள்ளது. அதேபோல், பிஹார், ஒடிசா, ஹரியானாவில் ராஜ்யசபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதனால், நாளை தேர்தல் தேதி வெளியாக வாய்ப்பில்லை; 16-ம் தேதிக்கு பிறகே அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
News March 14, 2026
மார்ச் 16-ல் அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

அதிமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு, மார்ச் 16-ல் அதிகாரப்பூர்வமாக தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் நிலையில், இதுவரை தொகுதி உடன்பாடு முடிவாகவில்லை. சீட் பேரத்தில் இழுபறி நீடிப்பதாலேயே பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்றும், பாஜகவுக்கு EPS பிடி கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
News March 14, 2026
மனித உடலில் தங்கம் இருப்பது உங்களுக்கு தெரியுமா?

நம் ஒவ்வொருவரது உடலிலும் தங்கம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இது கேட்பதற்கு விசித்திரமாக தோன்றலாம்; ஆனால் அது உண்மையே. 70 கிலோ எடையுள்ள ஒரு மனித உடலில் சுமார் 0.2 மி.கி தங்கம் உள்ளது. இது ஏறக்குறைய 5 லிட்டர் ரத்தத்தில் மிக சிறிய அளவில் கரைந்துள்ளதால், இதனை தனியாக பிரிக்க முடியாது. இது மூட்டு ஆரோக்கியத்திற்கும், உடலில் ஏற்படும் மின் சமிக்ஞைகளுக்கு பெரும் துணைபுரிவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.


