News June 15, 2024
மாவட்டச் செயலாளர் பதவிகளை மாற்ற இபிஎஸ் திட்டம்?

மக்களவைத் தேர்தலில் அதிமுக அடைந்தத் தோல்வியால் கட்சி நிர்வாகிகள் மீது இபிஎஸ் கடுமையான அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் கட்சியை மாவட்ட ரீதியில் மாற்றி அமைக்க அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2 தொகுதிகளுக்கு ஒருவர் விதம் மாவட்டச் செயலாளர்களை நியமிக்க அவர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே இதற்கான பட்டியலை இபிஎஸ் தயாரித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Similar News
News March 1, 2026
இன்னும் 1000 இடங்களில் தாக்குதல் நடக்கும்: இஸ்ரேல்

ஈரானில் வரும் நாள்களில் ஆயிரக்கணக்கான இலக்குகளை தாக்குவோம் என இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். ஈரானின் துணிச்சலான மக்கள் கொடுங்கோல் ஆட்சியின் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கான சூழலை இஸ்ரேல் உருவாக்கும் என கூறியுள்ளார். ஈரான் குடிமக்களே, இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்; இது ஒரு தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு எனவும் கூறியுள்ளார்.
News March 1, 2026
சமூகநீதிக்கும் ஸ்டாலினுக்கு சம்பந்தம் இல்லை: அன்புமணி

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரத்தை கொடுத்தவர் PM மோடி என அன்புமணி தெரிவித்துள்ளார். NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாஜக ஆளும் பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதற்கேற்ப நலத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், சமூகநீதிக்கும் ஸ்டாலினுக்கு சம்பந்தம் இல்லை என்றும், சமூகநீதி என்றாலே PM மோடிதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News March 1, 2026
3 ராசிகளுக்கு எச்சரிக்கை

சூரியன் மற்றும் சனி சேர்க்கையால் இம்மாதம் யுதி திருஷ்டி யோகம் உண்டாக இருப்பதால் 3 ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம். அதன்படி, *மேஷம்: காதல் வாழ்க்கையில் சிக்கல் வரும். திருமணமாகாதவர்களுக்கு துணை கிடைப்பது கடினமாக இருக்கும். *துலாம்: நிதி இழப்புகள் ஏற்படலாம். சொத்து வாங்கும் (அ) விற்கும் முடிவுகள் தவறாக முடியலாம். *கும்பம்: உறவினர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். கவனமாக இருங்கள்.


