News June 15, 2024

சத்தீஸ்கரில் 8 நக்சல்கள் சுட்டுக் கொலை

image

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், இன்று காலை அபுஜ்மர் பகுதியில் நக்சல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், 8 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் போது, பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News March 2, 2026

1 ரூபாய் செலவில்லாமல் ₹7 லட்சம் கிடைக்கும்

image

ஒரு ரூபாய் கூட பிரீமியம் செலுத்தாமல் EPFO-வில் ஊழியர்கள் ₹7 லட்சம் வரை ஆயுள் காப்பீடு பெறலாம். பணியில் இருக்கும் ஊழியர் இறந்தால், அவரது குடும்பம் அல்லது நாமினி, ₹2.5 லட்சம் – ₹7 லட்சம் வரை காப்பீடு தொகையாக பெற முடியும். ஊழியரின் கடைசி 12 மாத சராசரி சம்பளத்தின் அடிப்படையில் காப்பீடு தொகை கணக்கிடப்படும். EPFO போர்ட்டலில் உள்ள “Death claim filing by beneficiary”-ல் இதற்கு விண்ணப்பிக்கலாம். SHARE.

News March 2, 2026

இபிஎஸ் அதிரடி.. செந்தில் பாலாஜி பதற்றம்

image

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால், அதனை சரிசெய்யும் பொருட்டே EPS டெல்லி சென்றுள்ளாராம். திமுகவிற்கு உதவும் IAS, IPS அதிகாரிகள் பட்டியலை கொடுப்பதோடு அமைச்சர் KN நேரு, செந்தில் பாலாஜி ஆகியோர் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தவும், அமித்ஷாவிடம் EPS வலியுறுத்தவுள்ளாராம். இதனால் தேர்தலுக்கு முன்பு தமிழக அரசியலில் முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News March 2, 2026

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி.. இனிப்பான செய்தி

image

2021 தேர்தலின்போது 5 சவரன் தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. இது, சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு தள்ளுபடியும் செய்யப்பட்டது. இந்நிலையில், 2026 தேர்தலை முன்னிட்டு, நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதி வெளியாகலாம் என மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அதேநேரம், இதை எதிர்பார்த்து கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் மக்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

error: Content is protected !!