News June 15, 2024
விசைப்படகு மூழ்கி 2 மீனவர்கள் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற விசைப்படகு மூழ்கி 2 மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற முதல் நாளிலேயே படகு மூழ்கி இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடலில் மூழ்கிய மேலும் 2 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ஒருவரை கடலோரக் காவல்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Similar News
News November 13, 2025
பாக்., ராணுவ தளபதிக்கு உச்சபட்ச அதிகாரம்

ராணுவத்துக்கு உச்சபட்ச அதிகாரம் வழங்கும் அரசியல் சாசன 27-வது சட்டத்திருத்தம் பாக்., நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீதித்துறை முதல் அணு ஆயுதம் வரை பாக்.,கின் உச்சபட்ச அதிகாரங்கள் அனைத்தும் ராணுவ தளபதி கட்டுபாட்டில் வந்தது. பிரதமர் & அதிபர் பதவிகள் இனி அலங்கார பதவிகளாக மட்டும் நீடிக்கும். மேலும், பாக்., சுப்ரீம் கோர்ட் இனி சிவில், குற்ற வழக்குகளை மட்டுமே விசாரிக்க முடியும்.
News November 13, 2025
டெல்லி கார் வெடிப்பு: DNA உறுதியானது

டெல்லி செங்கோட்டை அருகே வெடிபொருள்கள் நிரம்பிய காரை ஓட்டி வந்து, வெடிக்க செய்தது டாக்டர் உமர் நபி தான் என்பது DNA பரிசோதனையில் தெரியவந்துள்ளது. உமரின் உடல் பாகங்களை வைத்து, அவரது தாயாரிடம் செய்யப்பட்ட DNA பரிசோதனையில் உறுதியானது. இதனிடையே உமர் நபி, பாபர் மசூதி இடிப்பு தினமான டிச.6 அன்று பெரிய குண்டுவெடிப்பை நடத்த திட்டமிட்டிருந்தார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
News November 13, 2025
₹20,000 வழங்குகிறது தமிழக அரசு

இ-ஸ்கூட்டர் வாங்க ₹20,000 வரை மானியம் வழங்கப்படும் என TN அரசு அறிவித்துள்ளது. உணவு டெலிவரி ஊழியர்கள் tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதேநேரத்தில் இந்த மானியம் பெற சில நிபந்தனைகள் உள்ளன. கூடுதல் தகவல்களுக்கு, உங்கள் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை நாடி இந்த திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது உள்ளிட்ட தகவல்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.


