News June 15, 2024

கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

image

கள்ளக்கடல் காரணமாக மீண்டும் குமரி கடலோரபகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று மீனவர்களும், கடலோர பகுதியில் வசிக்கும் மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென கலெக்டர் ஶ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரைகளில் கடல்சீற்றம் இயல்பை விடவும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Similar News

News August 13, 2025

102 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் 52,098 மனுக்கள்

image

பத்மநாபபுரம் லெட்சுமி மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமற்கு இன்று நேரில் சென்று, அவர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டு வருவதை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் மாவட்டத்தில் ஜூலை.15 முதல் ஆக.12 வரை 102 முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 52,098 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

குமரியில் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி

image

ஆலங்கோடு அருகே சரல்விளையை சார்ந்தவர் சுஜி(34).இவர் 100 நாள் வேலை பார்த்து வருகிறார். இவரிடம் மூன்று பேர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சம் வாங்கியுள்ளனர். பின்னர் வேலை வாங்கிக் கொடுக்காததால் அந்தப் பணத்தை சுஜி கேட்ட நிலையில் அவரை ஆபாசமாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News August 13, 2025

குமரி: நிலம் வாங்குபவர்கள் கவனத்திற்கு

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. கன்னியாகுமரி மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய<> இங்கே கிளிக் செய்து <<>>நிலத்தின் உரிமையாளரின் பெயர் அல்லது சர்வே நம்பர் கொடுத்து உடனே தெரிந்து கொள்ளலாம். SHARE IT

error: Content is protected !!