News June 15, 2024
பருப்பு வகைகளின் விலை அடுத்த மாதம் குறையும்

துவரை, கடலை மற்றும் உளுத்தம் பருப்பு வகைகளின் விலை ஜூலை மாதத்தில் குறைய வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களாக பருப்புகளின் விலையில் பெருமளவிலான மாற்றங்கள் ஏற்படவில்லை. எனினும், அவற்றின் விலை வழக்கத்தை விட சற்று அதிகமாகவே இருந்தது. இந்நிலையில், பருவமழை மற்றும் இறக்குமதி அதிகரிப்பு போன்ற காரணங்களால் பருப்புகளின் விலை குறைவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
குளிர்காலத்தில் பருக வேண்டிய எலுமிச்சை இஞ்சி கதா!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், குளிரினால் ஏற்படும் சளி, இருமலை சமாளிக்கவும் எலுமிச்சை – இஞ்சி கதா பருக சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ◆தேவையானவை: இஞ்சி, எலுமிச்சை சாறு, தேன், இலவங்கப்பட்டை, மிளகு & மஞ்சள் தூள் ◆செய்முறை: தண்ணீரில் இஞ்சி சாறு, இலவங்கப்பட்டை, மிளகு & மஞ்சள் தூளை சேர்த்து 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி எலுமிச்சை சாறு & தேன் கலந்து பருகலாம்.
News November 13, 2025
ஆம்னி பஸ் முடக்கத்துக்கு திமுக காரணம்: அண்ணாமலை

திமுகவின் பேராசையால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். திமுக அரசு பிற மாநில வாகனங்களுக்கு கூடுதல் சாலை வரி விதித்ததால், அம்மாநிலங்கள் தற்போது TN ஆம்னி பஸ்களுக்கு அதிக வரியை விதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் கூட்டணி கட்சிகள் மாநிலங்களிடம் பேசி பிரச்னையை பேசி தீர்க்காமல், மக்களை ஸ்டாலின் பலிகடா ஆக்குவதாகவும் விமர்சித்துள்ளார்.
News November 13, 2025
பெண்களுக்கு மாதம் ₹1200 தரும் அரசு! விண்ணப்பிப்பது எப்படி?

கணவனை இழந்து, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள 40- 79 வயதுக்குட்பட்ட விதவைகளுக்கு மாதம் ₹1,200 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின், பயனாளி 80 வயதை அடைந்த பிறகு, அவருக்கு ஓய்வூதிய தொகையோடு சேர்த்து முதியோர் ஓய்வூதியமாக மாதம் ₹500 வழங்கப்படும். விதவை சான்றிதழ், ஆதார், Voter ID, BPL அட்டை, முகவரி சான்றுடன் இ- சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். பல பெண்களுக்கும் பயனுள்ள இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


