News June 15, 2024

T20 WC: உகாண்டா 40 ரன்களுக்கு ஆல் அவுட்

image

T20 WCயில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் உகாண்டா அணி 40 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. அந்த அணியில் கென்னத் வைஸ்வா மட்டும் இரட்டை இழக்க ரன்கள் (11) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்கவே அந்த அணி 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 40 ரன்கள் எடுத்து. முன்னதாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கடந்த வாரம் உகாண்டா 39 ரன்கள் எடுத்ததே T20 WCல் எடுக்கப்பட்ட குறைவான ரன்னாக உள்ளது.

Similar News

News March 22, 2026

கணவர்களுக்கும் கர்ப்பகால அறிகுறிகள் தோன்றும்

image

கர்ப்பிணிகளுக்கு வாந்தி, Mood Swings, தூக்கமின்மை & உடல் எடை அதிகரிப்பு ஆகியவை பொதுவானவை. ஆனால், கணவர்களுக்கும் இந்த அறிகுறிகள் தென்படும் என சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? இதை Couvade Syndrome என டாக்டர்கள் சொல்கின்றனர். அதாவது, பார்ட்னருடன் ஏற்படும் வலுவான எமோஷனல் அட்டாச்மெண்ட் காரணமாக இது நிகழ்கிறது என டாக்டர்கள் கூறுகின்றனர். உலகளவில் 20% ஆண்களிடம் இந்த அறிகுறிகளை உணர்வதாக கூறப்படுகிறது.

News March 22, 2026

கொடுத்த வாக்கை பாஜக நிறைவேற்றவில்லை: சரத்

image

கட்சியில் சேர்த்துவிட்டு உரிய பொறுப்பு கொடுக்காமல் ஒருவரை காக்க வைப்பது தவறு என சரத்குமார் தெரிவித்துள்ளார். ஆதரவாளர்கள் கூட்டத்திற்கு பின் பேசிய அவர், திருச்சி பொதுக்கூட்ட மேடையில் என்னுடைய போட்டோ கூட இல்லை என எனது ஆதரவாளர்கள் ஆதங்கப்பட்டனர் என்றார். பாஜகவில் இணையும்போது தேசிய பதவி தருவதாக சொன்ன வாக்கை நிறைவேற்றவில்லை; பொறுப்புகள் கொடுத்தால் தான் பொறுப்போடு செயல்பட முடியும் எனவும் கூறியுள்ளார்.

News March 22, 2026

இந்த வார்த்தையை இப்போதும் கேட்பதுண்டா?

image

வெளியூர்களில் ஒருவர் நம்மை பார்க்கும்போதும், வரன் தேடும்போதும் ‘பூர்விகம்’ எது என்று முன்னர் கேட்பதுண்டு. ஆனால், தற்போதோ சொந்த ஊர் எது என கேட்கின்றனர். பூர்விகம் என்பது உங்களின் முன்னோர்கள் வாழ்ந்த ஊர், சொந்த ஊர் என்பது நீங்கள் பிறந்த ஊர். தற்போது பலரும் பணி காரணமாக வெளியூரில் சென்று செட்டில் ஆகிவிடுகின்றனர். இதனால் பூர்விகம் என்ற சொல் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது என கூறுகின்றனர். உங்கள் கருத்து?

error: Content is protected !!