News June 15, 2024
ஆட்சி அதிகாரத்துக்காக காலில் விழுந்து விட்டார் நிதிஷ்: பி.கே.

மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக பிஹாருக்கு பிரதமர் மோடி வந்தபோது, அவரின் காலில் முதல்வர் நிதிஷ்குமார் விழுந்தார். இதை பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஆட்சி அதிகாரத்துக்காக 13 கோடி பிஹார் மக்களின் கவுரவத்தை நிதிஷ்குமார் விற்று விட்டதாகவும், நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே (மோடி) காலில் விழுந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News September 8, 2025
BREAKING: முடிவை மாற்றினார் செங்கோட்டையன்!

ஹரித்வார் போகவே டெல்லி செல்வதாகவும், பாஜக தலைவர்களை சந்தித்து பேசப் போவதில்லை என்றும் தெரிவித்த செங்கோட்டையன் தனது முடிவை தடாலடியாக மாற்றியுள்ளார். டெல்லியில் முகாமிட்டுள்ள அவர், அமித்ஷாவை சந்தித்துள்ளார். அதில், அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக அவரிடம் செங்கோட்டையன் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிமுகவில் மறுபடியும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்குமோ?
News September 8, 2025
நாளை துணை ஜனாதிபதி தேர்தல்

துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நாளை (Sep 9) நாடாளுமன்றத்தில் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன்பின் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும். து.ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் கல்லூரியில் ராஜ்யசபா MP-கள் 238 பேர், லோக்சபா MP-கள் 542 பேர் உள்பட மொத்தம் 781 MP-கள் வாக்களிப்பர். குறைந்தது 391 வாக்குகள் பெறுபவர் வெற்றிபெறுவார்.
News September 8, 2025
காக்கி சட்டையுடன் கைதான DSP! சட்டம் கடமையை செய்தது

வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய, காஞ்சி DSP சங்கர் கணேஷ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த நீதிபதி, இவ்விவகாரத்தில் இன்று ஆஜராக வந்த அவரை கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். இதனையடுத்து, போலீஸ் சீருடையில் இருந்த அவர் நீதிமன்ற வளத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார். இதன்பின், போலீஸ் வேன் மூலம் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.