News June 15, 2024
மீண்டும் கடலுக்கு திரும்பிய மீனவர்கள்

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, அதிகாலை முதல் 11 மாவட்டங்களில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு உற்சாகமாக மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த ஏப்.15ஆம் தேதி தொடங்கிய மீன்பிடி தடை காலம் 61 நாள்களுக்குப் பின் நேற்றுடன் நிறைவடைந்தது. 2 மாதங்கள் இடைவெளி இருந்ததால் அதிக மீன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், மீன்களின் விலை குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 5, 2026
மாணவர்களுக்கு ₹4,000.. வந்தாச்சு HAPPY NEWS

ஊரகப் பகுதியில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வுத் தேர்வு நடத்தி TN அரசு கல்வி உதவித் தொகை (100 மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு தலா ₹1,000) வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான தேர்வு முடிவுகள் ஜன.20-ல் வெளியானது. தற்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை www.dge.tn.gov.in இணையதளத்தில் அரசு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் தகுதியை உறுதி செய்த பின் உதவித் தொகை வழங்கப்படும்.
News March 5, 2026
BREAKING: விபத்தில் சிக்கிய இந்திய விமானம்?

அசாமில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படையின் போர் விமானம் Sukhoi Su-30MKI விபத்தில் சிக்கியதாக சந்தேகம் எழுந்துள்ளது. கவுகாத்தியில் இருந்து புறப்பட்ட விமானம், மாலை 7 மணியளவில் கர்பி அங்லாங்கில் உள்ள சோகிஹோலா அருகே ரேடாரில் இருந்து மறைந்து மாயமானது. அது விபத்தில் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், தேடும் பணியை விமானப்படை தீவிரப்படுத்தியுள்ளது.
News March 5, 2026
தமிழக கவர்னர் மாற்றமா?.. பரபரப்பு தகவல்

தமிழ்நாடு கவர்னர் R.N.ரவியை மே.வங்க கவர்னராக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக <<19307017>>மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்<<>>. R.N.ரவியை மாற்ற வேண்டுமென்று திமுக நீண்டகாலமாக கோரி வந்த நிலையில், 5 ஆண்டுகால ஆட்சி முடிவில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மே.வங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்பாரா அல்லது நிரந்தரமாக மாற்றமா என்பதும் தெரியவில்லை.


