News June 14, 2024
குழந்தைகளிடம் இதை சொல்லாதீர்கள்

பெற்றோர்கள் குழந்தைகள் மீது பாசமாக இருந்தாலும், சில நேரங்களில் பயன்படுத்தும் வார்த்தைகள் குழந்தைகளுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கோபத்தை வெளிப்படுத்தும்போது நீ ஒரு முட்டாள், அறிவில்லையா?, நீ செய்வதை இதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். இது அவர்களை பாதுகாப்பற்றவர்களாக உணரச் செய்யும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
Similar News
News March 9, 2026
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

புதுக்கோட்டை, திருவாப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று(9.03.2026) அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். இதனால், அம்மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் இன்றைய தினம் இயங்காது. அதேநேரம், அரசு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 14-ம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.
News March 9, 2026
பசலைக்கீரையும் பலவித நன்மைகளும்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி, ➤பசலைக்கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் உடலை பாதுகாக்கும். ➤ஃபோலேட் இருப்பதால், பசலைக்கீரையை தவறாமல் சாப்பிட்டால், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. ➤லுடின் நிறைந்திருப்பதால், கண் புரை & இதர கண் பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும். ➤பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால் மூட்டுகளில் வலி குறையும். Share it.
News March 9, 2026
சீக்கிரம் தேர்தலை நடத்துங்க.. தயாரிப்பாளர் தனஞ்செயன்

த்ரிஷா சர்ச்சைக்கு பின்னும் விஜய்க்கான ஆதரவு குறையவில்லை என கூறப்படும் நிலையில், சீக்கிரம் தேர்தலை வச்சி முடிங்க, இந்த Opinion Poll தொல்லை தாங்க முடியலே என ECI-க்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு நாளும், அவங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு Opinion Poll-ஐ Twitter-ல போட்டு நம்மள confuse பண்றாங்க; ஜனங்க நிம்மதியா, அவங்க இஷ்டப்படி ஓட்டு போட விடுங்கப்பா எனவும் கூறியுள்ளார்.


