News June 14, 2024
யார் இந்த ஸ்ரீநிவாஸ் ஹெக்டே

நிலவின் ரகசியங்களை ஆராய்வதற்காக இந்தியாவின் ISRO சார்பில், முதன்முதலாக சந்திரயான்-1 திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கான பணிகள், 22 அக்டோபர் 2008 முதல் 28 ஆகஸ்ட் 2009 வரை நடந்த நிலையில், அதன் திட்ட இயக்குநராக ஸ்ரீநிவாஸ் ஹெக்டே இருந்துள்ளார். அதுமட்டுமின்றி, UR ராவ் செயற்கைக்கோள் மையத்தின் உறுப்பினராக அவர், ஆயிரக்கணக்கான விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளிலும் பங்கேற்றுள்ளார்.
Similar News
News March 3, 2026
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி.. இனிப்பான செய்தி

2021 தேர்தலின்போது 5 சவரன் தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. இது, சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு தள்ளுபடியும் செய்யப்பட்டது. இந்நிலையில், 2026 தேர்தலை முன்னிட்டு, நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதி வெளியாகலாம் என மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அதேநேரம், இதை எதிர்பார்த்து கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் மக்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
News March 3, 2026
சந்திர கிரகணமும் அறிவியலும்

<<19280605>>சந்திர கிரகணம்<<>> என்பது ஒரு அற்புதமான வானியல் நிகழ்வாகும். சந்திரன், சூரியன், பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. சந்திர கிரகணத்தால் எந்த பேரழிவோ, உடல்நல பாதிப்போ ஏற்படாது என்கின்றனர் விஞ்ஞானிகள். எல்லா நாள்களிலும் ஏற்படுவது போலவே தான், கிரகணம் அன்றும் உடல்நலப் பிரச்னைகளும், தனிப்பட்ட பிரச்னைகளும் ஏற்படுகின்றன என்கின்றனர். மற்றவை எல்லாம் நம்பிக்கை தானாம். SHARE IT
News March 3, 2026
ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பது இனி ரொம்ப ஈசி!

ரேஷன் கார்டில் புதிய பெயரை சேர்க்க, இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். அதனை வீட்டில் இருந்தபடியே செய்யும் வகையில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. www.tnpds.gov.in இணையதளம் சென்று, ‘புதிய உறுப்பினர் பெயரை சேர்க்க’ ஆப்சனை கிளிக் செய்து விவரங்களை உள்ளிடுங்கள். மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டால் உங்கள் விவரம் அரசுக்கு சென்றுவிடும். அதன்பின், 1 வாரத்திற்குள் பெயர் இணைக்கப்படும். SHARE


