News June 14, 2024
போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை

தமிழகத்தில் நாளை முதல் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. இந்த நிலையில், சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதால், நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. குறிப்பாக, தாம்பரம் முதல் கிளாம்பாக்கம் வரை வாகனங்கள் ஊர்ந்தவாறு செல்கின்றன. இதனிடையே, தொடர் விடுமுறையை பயன்படுத்தி சில ஆம்னிப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
Similar News
News September 12, 2025
BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

USA டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 36 காசுகள் சரிந்து, இதுவரை இல்லாத வகையில் 88.47 ஆக குறைந்துள்ளது. இந்தியா – அமெரிக்கா இடையேயான வரி பிரச்னை மற்றும் டாலரை வலுப்படுத்த அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகளால் இந்த வீழ்ச்சி கண்டிருப்பதாகவும், இதனால் ஏற்றுமதி துறை கடும் பாதிப்பை சந்திக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக பல லட்சம் கோடி நஷ்டம் ஏற்படும்.
News September 12, 2025
Sports Roundup: கவுன்டி கிரிக்கெட்டில் வாஷிங்டன் சுந்தர்

* இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயர் கவுன்டி அணிக்காக விளையாட வாஷிங்டன் சுந்தர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். *ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் உலக தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள வீரரை இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி வீழ்த்தினார். * புரோ கபடி லீக்கில் தபாங் டெல்லி 38-28 என்ற கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது * தமிழ் தலைவாஸ் கேப்டன் பவன் ஷெராவத்திற்கும் அணி நிர்வாகத்திற்கும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
News September 12, 2025
அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்தாரா? இல்லையா?

டெல்லியில் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்தாரா? இல்லையா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது. சமீபத்தில் டெல்லி சென்ற செங்கோட்டையன், அரசியல் சூழ்நிலை குறித்து அமித்ஷாவிடம் பேசியதாக கூறினார். ஆனால் பாஜக தரப்பு, இதில் மழுப்பலாகவே பதிலளித்து வருகிறது. அமித்ஷாவை சந்தித்தாக அவர் சொல்லிக்கொள்வதாகவும், ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என வானதி ஸ்ரீனிவாசன், கஸ்தூரி தெரிவிக்கின்றனர். உண்மை என்ன?