News June 14, 2024
T20 WC: இன்று போட்டி நடைபெறுமா?

T20 உலகக் கோப்பையில் இன்று அமெரிக்கா-அயர்லாந்து இடையிலான போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. புளோரிடா மாகாணத்தில் உள்ள மைதானத்தில் போட்டி நடைபெற இருந்த நிலையில், அங்கு பெய்த கனமழையால் மைதானம் ஈரப்பதமாக உள்ளது. ஒருவேளை இன்றைய போட்டி கைவிடப்பட்டால் US அணி எளிதாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். அதே நேரம் பாக்., அணி வெளியேறும் நிலை ஏற்படும்.
Similar News
News March 2, 2026
UAE மீதான தாக்குதலுக்கு PM மோடி கண்டனம்

UAE மீது ஈரான் டிரோன் தாக்குதலை தொடுத்துள்ள நிலையில், அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமதுடன் PM மோடி உரையாடியுள்ளார். இந்த கடினமான நேரத்தில் UAE உடன் இந்தியா துணை நிற்கும் என்றும், தாக்குதலில் இறந்தவர்களுக்கு தனது இரங்கல்கள் எனவும் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள அவர், UAE-ல் உள்ள இந்தியர்களை பத்திரமாக காப்பதற்காக ஷேக் முகமதுக்கு நன்றியும் கூறியுள்ளார்.
News March 2, 2026
CINEMA 360°: வசூல் மழையில் ‘தாய்கிழவி’

*ராதிகாவின் ‘தாய்கிழவி’ 3 நாள்களில் ₹10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் *ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2′ படத்தின் முதல் பாடல் மார்ச் 4-ம் தேதி ரிலீசாகிறது *’பெத்தி’ படத்தின் டப்பிங் பணிகளை ராம்சரண் தொடங்கியுள்ளார் *ரீ-ரிலீஸில் விஜய்யின் ‘தெறி’ ₹90 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல் *பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து பிரகாஷ் ராஜ் விலகியுள்ளார்
News March 2, 2026
சசிகலாவின் காலம் முடிந்துவிட்டது: காங்கிரஸ் MP

சசிகலா புதிய கட்சி தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு எந்தவித மக்கள் ஆதரவும் கிடையாது என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். ஒரு காலத்தில் அதிமுகவில் சசிகலாவுக்கு செல்வாக்கு இருந்தது உண்மைதான், ஆனால் தற்போது அவரது காலம் முடிந்துவிட்டது எனவும் தெரிவித்தார். மேலும் சசிகலாவுடன் பயணித்த டிடிவி தினகரன் தற்போது எங்கு இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் பேசியுள்ளார்.


