News June 14, 2024
காட்பாடி தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

காட்பாடி தனியார் மெட்ரிக் பள்ளியில் குண்டு வைத்திருப்பதாக கூறி நேற்று மர்ம நபர் ஒருவர் இ-மெயில் அனுப்பியுள்ளார். இதுகுறித்து பள்ளி தாளாளர் காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் மெயில் அனுப்பியது அதே பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் என தெரியவந்தது. அந்த மாணவனை பெற்றோருடன் வரவழைத்து விசாரித்தனர். அதில் விளையாட்டுக்காக செய்தேன் என்று தெரிவித்தார்.
Similar News
News March 11, 2026
வேலூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News March 11, 2026
தமிழகக் கல்வித் திட்டம் நிராகரிப்பா? – கதிர் ஆனந்த் கேள்வி

தமிழகத்தில் புதிய தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி & ஆராய்ச்சி மையம் (NITTTR) அமைக்கக் கோரி வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார். இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார், சென்னையில் ஏற்கனவே மையம் இருப்பதால் புதிய மையம் தேவையில்லை எனத் தெரிவித்தார். மாநிலத்தின் வளர்ச்சிக்கான இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
News March 11, 2026
வேலூர்: மருமகளால் தப்பிய ‘மாபெரும்’ நஷ்டம்!

குடியாத்தம் வினாயகபுரம் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் சேட்டு என்பவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 8 பவுன் தங்க நகைகளைத் திருடினர். அவர் மாடியில் உறங்கியபோது இச்சம்பவம் நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, மருமகள் வெளியூர் சென்றபோது அணிந்து சென்றதால் பெரும் நகைகள் தப்பின. மோப்ப நாய் டோரா மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் குடியாத்தம் டவுன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


