News June 14, 2024
திருச்சி: மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு

திருச்சி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமும் இணைந்து ஜூலை 2024 முதல் மார்ச் 2025 வரை 9 மாதத்திற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்து வழங்கப்பட உள்ளது. ஜூன்.19,20,21 ஆகிய 3 தினங்களுக்கு ஆட்சியர் அலுவலக பின்புறம் இந்த சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
Similar News
News March 2, 2026
திருச்சி: துணை கலெக்டர்கள் இடமாற்றம்

தமிழகம் முழுவதும் துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் 21 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் திருச்சி மாவட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீராம், திருச்சி வாணிப கழக சிறப்பு பறக்கும் படை துணை கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி தனி மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் கன்னியாகுமரி வாணிபக் கழக மண்டல மேலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
News March 2, 2026
திருச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருச்சி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு க்ளிக் செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!
News March 2, 2026
திருச்சி: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் / சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தி
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


