News June 14, 2024
கோல்ட் பிளட் என்ற அரிய வகை ரத்தம் (1/2)

RH-NULL ரத்த வகையை, ‘கோல்ட் பிளட்’ என்று மருத்துவ உலகம் அழைக்கிறது. முதன்முதலில் 1961 இல் ஆஸ்திரேலிய பழங்குடி பெண்ணிடம் மிக அரிதான இந்த ரத்த வகை கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் வசிப்பவர்களில் 50-க்கும் குறைவான நபர்களிடம் மட்டும்தான் இவ்வகை ரத்தம் இருக்கிறது என்பதை நம்ப முடிகிறதா? ஜப்பான், பிரேசில், கொலம்பியா, அயர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
Similar News
News September 7, 2025
TET தேர்ச்சி கட்டாயம்: ஆக்ஷனில் பள்ளிக்கல்வித்துறை

பள்ளி ஆசிரியர்கள் TET தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று SC தீர்ப்பளித்தது. இதனால் தமிழகத்தில் 1.76 லட்சம் ஆசிரியர்களின் பணி கேள்விக்குறியானது. ஆனால், ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், TET தேர்வில் தேர்ச்சி பெற்ற, பெறாத ஆசிரியர்கள் விவரங்களை கணக்கெடுக்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது.
News September 7, 2025
வாக்குச்சீட்டை கண்டு பாஜக பயப்படுவது ஏன்? காங்.,

கர்நாடகாவில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல்களில் மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை பரிந்துரைக்க அம்மாநில காங்., அரசு முடிவு செய்துள்ளது. இது கற்காலத்துக்கு கொண்டு செல்வதாக பாஜக குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், வாக்குச்சீட்டை கண்டு பாஜக பயப்படுவது ஏன்? என CM சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக, வாக்குத்திருட்டில் ஈடுபடுவதாக காங்., தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
News September 7, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தம்: செப்.10-ல் ஆலோசனை

இந்தாண்டு இறுதியில் பிஹாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்றது. இதன்படி 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது. இதனால் பாஜக, ECI உதவியுடன் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக காங்., குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், செப்.10-ல் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி, மாநில தேர்தல் ஆணையர்களுடன் ECI ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.