News June 14, 2024
இணைப்புக்கு இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலாவுக்கு அழைப்பு

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க கோரி, EPS, OPS, சசிகலாவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பு குழுவின் ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி, கே.சி.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளனர். மறப்போம்! மன்னிப்போம்! என்ற தத்துவத்தை மனதில் கொண்டு அதிமுக தலைவர்கள் ஒன்றுபட வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு மீண்டும், அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே, அதிமுக தொண்டர்களின் எண்ணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News September 8, 2025
வரலாற்று தோல்வி அடைந்த தென்னாப்பிரிக்கா

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ODI-யில் தென்னாப்பிரிக்கா படுதோல்வி அடைந்தது. ENG நிர்ணயித்த 415 என்ற இமாலய ஸ்கோரை துரத்திய அந்த அணி வெறும் 72 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. ஆவேசமாக பந்துவீசிய ENG-யின் ஆர்ச்சர் 4 விக்கெட் வீழ்த்தினார். முடிவில் 342 ரன்கள் வித்தியாசத்தில் SA தோற்றது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் அடைந்த தோல்வி இதுதானாம்.
News September 8, 2025
PM மோடிக்கு சவால் விட்ட கெஜ்ரிவால்

அமெரிக்க வரிவிதிப்பு தொடர்பாக PM மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார். அமெரிக்க பொருள்களுக்கு 75% வரிவிதித்து பிரதமர் தைரியம் காட்ட வேண்டும் எனவும், அவ்வாறு செய்தால், நாட்டு மக்கள் அவர் பின்னால் நிற்பார்கள் என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும், அமெரிக்க பருத்தி இறக்குமதிக்கான 11% வரியை நீக்கி டிரம்ப் முன்பு பிரதமர் பணிந்ததாகவும் விமர்சித்துள்ளார்.
News September 8, 2025
ஹாலிவுட்டில் கலக்கப் போகும் ‘மதராஸி’ வில்லன்..!

‘துப்பாக்கி’, ‘பில்லா 2’, ‘அஞ்சான்’, ‘மதராஸி’ உள்ளிட்ட படங்களில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய வித்யுத் ஜாம்வால் அடுத்ததாக ஹாலிவுட்டில் களமிறங்குகிறார். ‘STREET FIGHTER’ படத்தில் அவர் ‘தால்சிம்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதை பாரமவுண்ட் பிக்சர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. அடுத்தாண்டு அக்டோபர் 16-ம் தேதி படம் ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது நடிப்பு யாருக்கெல்லாம் பிடிக்கும்?