News June 14, 2024

இந்தி சூரரைப் ‘போற்று’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

image

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020ல் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘சூரரைப் போற்று’. தமிழில் கிடைத்த வரவேற்பையடுத்து இப்படம் இந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் ‘சர்ஃபிரா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இப்படம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என்றும், டிரெய்லர் ஜூன் 18ஆம் தேதி வெளியாகும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Similar News

News March 19, 2026

கூட்டணி முடிவை மீண்டும் மாற்றிய ரங்கசாமி!

image

NDA-வில் அதிருப்தியிலிருந்த NR காங்கிரஸ், தங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் விஜய் உடன் கூட்டணி அமைப்போம் என நேற்று முன்தினம் கூறியிருந்தது. மேலும், 2 நாள்களாக NR காங்கிரஸ் – பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் இருந்தனர். இதனால், கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் உருவானது. இந்நிலையில், திடீரென தனது முடிவை மாற்றிய ரங்கசாமி, இன்று காலை முதல் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

News March 19, 2026

நம்பர் முக்கியமில்ல, மெம்பர் தான் முக்கியம்: ECI அசத்தல்

image

ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதற்கு இது சிறந்த உதாரணம். நெல்லை அம்பை தொகுதிக்குட்பட்ட மாஞ்சோலை அடுத்த ஊத்து பகுதியில் 10 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், அவர்களுக்காக தரைப்பகுதியிலிருந்து 40 கிமீ தூரத்திலான மலைப் பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது. அதேபோல், 5 வாக்குகளுக்காக கொல்லிமலை எஸ்டேட்டிலும் வாக்குச்சாவடி அமையவுள்ளது. Great!

News March 19, 2026

ஆதவ்வால் ஆனந்த் தரப்பு அதிருப்தியா?

image

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் இடையே மோதல்போக்கு உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், RK நகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட சென்னையின் சில தொகுதிகளை ஆதவ் தரப்பு கைப்பற்றிவிட்டதாக கூறப்படுகிறது. இது, இந்த தொகுதிகளில் களப்பணியாற்றி வந்த ஆனந்த் தரப்பினருக்கு வருத்தம் அளித்துள்ளதாம். இதுதொடர்பாக முறையிட்ட நிர்வாகிகளிடம், தன்னையே பாஜகவுடன் பேசுவதாக விஜய் வரை புகார் கூறிவிட்டனர் என ஆனந்த புலம்புவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!