News June 14, 2024
தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உடன் சோதனை செய்து வருகின்றனர். போலீசார், பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என தீவிர விசாரணை செய்து வருகின்றனர். தகவல் அறிந்து வந்த மாணவர்களின் பெற்றோர்கள், அங்கு கூடியதால் பரபரப்பு நிலவி வருகிறது.
Similar News
News March 4, 2026
தண்டையார்பேட்டை: மின் பெட்டியை மூட கோரிக்கை

தண்டையார்பேட்டை தாண்டவராயன் தெருவில், மின் பெட்டி திறந்த நிலையில் உள்ளது. திறந்த நிலை மின் பெட்டிக்கு அருகில், தனியார் மருத்துவமனை, வணிக நிறுவனங்கள், அம்மா உணவகம் மற்றும் ATM-கள் உள்ளன. இச்சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் & இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும். அசம்பாவிதம் நிகழும் முன், மின் பெட்டியை மூட கோரிக்கை எழுந்துள்ளது.
News March 4, 2026
சென்னை: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் பண்ணுங்க.
News March 4, 2026
சென்னை: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

சென்னை மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.


