News June 14, 2024

உதகை: சிஐடியு தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

image

உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நீலகிரி மாவட்ட சிஐடியு சார்பாக ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் எல்.சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. மாவட்ட சிஐ டியு செயலாளர் வினோத் பொருளாளர் நவீன் சந்திரன் உள்பட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Similar News

News March 3, 2026

குன்னூர் மக்களுக்கு வந்த சோதனை!

image

குன்னூர் வண்டிப்பேட்டை அம்மா உணவகத்தில் மாவு அரைக்கும் இயந்திரம் பழுதானதால், காலை உணவாக இட்லி வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. சமையல் கூடம் சேதமடைந்தும், உபகரணங்கள் பராமரிப்பின்றி உள்ளதாலும் பொங்கல் மற்றும் கலவை சாதம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர் வருகை குறைந்துள்ள நிலையில், இயந்திரத்தைச் சீரமைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 3, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச் 2) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை நீலகிரி மாவட்ட காவல்துறை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

News March 2, 2026

உதகை: பொதுத்தேர்வு மையத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு

image

உதகையிலுள்ள பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் பிளஸ்-2 பொதுத்தேர்வினை, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தண்ணீரு இன்று நேரில் ஆய்வு செய்தார். தேர்வுகள் முறையாக நடைபெறுகிறதா என்பதையும், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் அவர் கேட்டறிந்தார். மேலும், பறக்கும் படையினரும் தீவிர கண்காணிப்பு மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

error: Content is protected !!