News June 14, 2024
குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டம்

டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. பருவமழை பொய்த்ததால், டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், விவசாயிகளுக்கு உதவும் வகையில், குறுவை சாகுபடி செய்வதற்காக சிறப்புத் தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ₹78.67 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
கள்ளக்குறிச்சி BDO எண்களை தெரிஞ்சிக்கோங்க!

கள்ளக்குறிச்சி மக்களே.., உங்கள் பகுதியில் சாலை வசதி, பாலம், மின் விளக்கு, நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார், கோரிக்கைகளை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம்.
1). சின்னசேலம் – 7402606430, 7402606431
2). கள்ளக்குறிச்சி – 7402606425, 7402606426
3). கல்வராயன்மலை – 7402606450
4). சங்கராபுரம் – 7402606440, 7402606441
5). ரிஷிவந்தியம் – 7402606435, 7402606436
6). திருக்கோவிலூர் – 7402606339
News March 5, 2026
70 தொகுதிகளா? பாஜகவின் பிளானுக்கு EPS பதில்

மொத்தமாக 70 தொகுதிகளை கொடுங்கள், நாங்கள் கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுத்துவிடுகிறோம் என்று பியூஷ் கோயல், EPS-யிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பாஜகவுக்கு 25 தொகுதிகள், மற்ற கட்சிகளுக்கு தாங்களே சீட் ஒதுக்கீடு செய்வதாக EPS கூறிவிட்டாராம். இதனால் ஏற்பட்ட முரண்பாட்டாலேயே அவர் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. மேலும், குறைந்தது பாஜகவுக்கு 30 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாம்.
News March 5, 2026
ஏலக்காய் விலை ஒரே நாளில் குறைந்தது

போர் பதற்றத்தால், அரபு நாடுகளுக்கான ஏலக்காய் ஏற்றுமதியில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் 1 கிலோ ஏலக்காய் ₹2,400-லிருந்து ₹2,250 ஆக குறைந்துள்ளது. குறிப்பாக, இடுக்கி ஏலக்காய் சந்தைக்கு ஒரு நாளில் 1 லட்சம் கிலோ அளவுக்கு வரத்து இருக்கும் நிலையில், கிலோவுக்கு ₹150 வரை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். வர்த்தகம் ₹1.50 கோடி வரை குறைந்துள்ளதால் ஏலக்காய் விவசாயிகள், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.


