News June 14, 2024
நீட் தேர்வு: NTAக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

2024 நீட் யுஜி தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் புதிதாக தொடுக்கப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, ஜூலை 8ஆம் தேதி விசாரணைக்கு வரும் மனுக்களுடன் இந்த மனுக்களையும் சேர்க்கும்படி ஆணையிட்டது.
Similar News
News September 7, 2025
சூர்யா 46 ஷூட்டிங் ஸ்பாட்டில் இரட்டை கொண்டாட்டம்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘சூர்யா 46’ ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹைதராபாத்தில் நடந்துவரும் ஷூட்டிங்கின் இடையே, சூர்யா சினிமாவில் அறிமுகமாகி 28 ஆண்டுகளை நிறைவு செய்ததை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். அப்போது கேக் வெட்டி சூர்யா, சக கலைஞர்களுக்கு பகிர்ந்துள்ளார். மேலும், ‘லோகா 1’ படத்தில் பணியாற்றிய கலைஞர்களுடனும் தனது மகிழ்ச்சியை சூர்யா வெளிப்படுத்தினார்.
News September 7, 2025
வரலாறு படைத்தார் சிக்கந்தர் ராசா..!

சர்வதேச T20 போட்டிகளில் அதிக POTM வென்று (டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நாடுகள் மட்டும்) ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா வரலாறு படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் 18-வது முறையாக POTM வென்று அவர் அசத்தியுள்ளார், அவருக்கு அடுத்த இடத்தில் கோலி(16), சூர்யகுமார்(16), முகமது நபி(14), ரோகித்(14), ரிஸ்வான்(12), வார்னர்(12), மேக்ஸ்வெல்(12) ஆகியோர் உள்ளனர். இந்த சாதனையை யார் முறியடிப்பார்?
News September 7, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க