News June 14, 2024
கூடுதலாக 28 மெட்ரோ ரயில்கள் வாங்க ஒப்புதல்

பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மெட்ரோ ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை 4ல் இருந்து 6 ஆக உயர்த்தவும், 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்களைக் கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டது. இந்நிலையில், ரூ.2,820.90 கோடி மதிப்பில் கூடுதலாக 28 மெட்ரோ ரயில்களை வாங்க நிதி ஆயோக் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை தயாரித்து பெறுவதற்கு 2 ஆண்டுகள் வரையிலாகும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 13, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (நவ.12) இரவு 10 மணி முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 13, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News November 13, 2025
அர்ஜுன் டெண்டுல்கரை கழற்றிவிட்ட மும்பை?

சஞ்சு சாம்ஸன்-ஜடேஜா டிரேடிங்கை தொடர்ந்து, வேறு சில அணிகளும் வீரர்களை பரிமாற்றிக் கொள்ள முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்வாகம் சர்துல் தாக்கூரை அவரது அடிப்படை ஏலத் தொகையான ₹2 கோடிக்கு மும்பை அணிக்கு டிரேட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு மாற்றாக வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கரை பெற்றுள்ளதாகவும் ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


