News June 14, 2024
ஜூன் 21-ல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன் 21ஆம் தேதி காலை 11 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News March 14, 2026
விருதுநகர்: பெண்ணை மிரட்டி ரூ.80 லட்சம் பறிப்பு; போலீஸ் கைது.!

விருதுநகர், ஆமாத்தூரைச் சேர்ந்த ஏட்டு சுந்தர்ராஜ் (35) என்பவர், விருதுநகரைச் சேர்ந்த கணவரை இழந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாரத்தை கூறி பெண்ணுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார். மேலும் அவரது மகளை டாக்டருக்கு படிக்க வைப்பதாக கூறி ரூ.80 லட்சம் வரை பெற்று மோசடி செய்துள்ளார். இது குறித்த புகாரில் சுந்தர்ராஜ் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
News March 14, 2026
சிவகாசி: வாகன சோதனையில் சிக்கிய பட்டாசுகள்

வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம் விலக்கில் எஸ்.ஐ., முருகேஸ்வரன் தலைமையில் போலீசார் அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் முழுமை அடையாத 30 ஷாட் கொண்ட 350 பாக்கெட் பேன்சி ரக பட்டாசுகள் இருப்பது தெரிய வந்தது. லோடு ஆட்டோவுடன் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து, மார்க்கநாதபுரம் டிரைவர் இம்மானுவேலை (28) கைது செய்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.