News June 14, 2024
சுப்பையா கொலை வழக்கில் அனைவரும் விடுதலை

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நிலப்பிரச்னை தொடர்பாக சென்னையை சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சுப்பையா 2013இல் வெட்டிக் கொல்லப்பட்டார். இதில், 7 பேருக்கு மரண தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில், அனைவரையும் விடுவித்து ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Similar News
News March 2, 2026
40 ஆண்டுகளாக செய்ய நினைத்தது இதான்: இஸ்ரேல் PM

டெஹ்ரானில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் PM நெதன்யாகு கூறியுள்ளார். வரும் நாள்களின் இது மேலும் அதிகரிக்கும் என்ற அவர், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டது மிகுந்த வலி கொடுப்பதாகவும் பேசியுள்ளார். தற்போது தங்களுடன் USA-ம் சேர்ந்துள்ளதால் 40 ஆண்டுகளாக செய்ய நினைத்ததை தான் இப்போது செய்யப்போவதாகவும், தீவிரவாதத்தை அழிப்பதே இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
News March 2, 2026
வெள்ளி விலை கிலோவுக்கு ₹10,000 குறைந்தது

தங்கத்தை போலவே வெள்ளியும் இன்று குறைந்து நகைப் பிரியர்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹10 குறைந்து ₹310-க்கும், 1 கிலோ வெள்ளி ₹10,000 குறைந்து ₹3.10 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. ஈரான் – US போரால் தங்கம், வெள்ளி விலை உயரும் என பொதுமக்கள் அச்சப்பட்ட நிலையில், விலை குறைந்தது இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
News March 2, 2026
எகிறிய எதிர்பார்ப்புகள்.. ரிலீசாகாத படங்கள்!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து ரிலீஸாகாமல் போன படங்களின் லிஸ்ட் பெருசு. அப்படி ஒரு லிஸ்ட்டை உங்களுக்காக கொண்டுவந்துள்ளோம். படங்கள் ரிலீஸுக்கு தயாராகிய சூழலில், வெவ்வேறு பிரச்னைகளால் ரிலீஸாகாமல் போன படங்களை இந்த லிஸ்ட்டில் இணைத்துள்ளோம். இதில் விடுபட்டுப்போன படத்தை நீங்க கமெண்ட் பண்ணுங்க.


