News June 14, 2024
யூரோ கோப்பை கால்பந்து தொடர் இன்று தொடக்கம்

உலகக் கோப்பைக்கு அடுத்து அதிக மக்களால் ரசிக்கப்படும் யூரோ கோப்பை கால்பந்து தொடர் இன்று ஜெர்மனியில் தொடங்குகிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கவிருக்கும் போட்டியில் ஜெர்மனி – ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இத்தொடரில் நடப்பு சாம்பியன் இத்தாலி உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்கின்றன. இறுதிப் போட்டி ஜூலை 14ஆம் தேதி பெர்லினில் நடைபெறவுள்ளது.
Similar News
News March 13, 2026
உதகையில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம்

உதகை ஏடிசி திடலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில், செயலாளர் பாமா ரமேஷ் முன்னிலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதை புழக்கத்தைத் தடுக்கத் தவறிய மாநில அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
News March 13, 2026
ராசி பலன்கள் (13.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News March 13, 2026
9-வது வயதில் செஸ்ஸில் நம்பர் 1

தமிழகத்தைச் சேர்ந்த 9 வயது சதுரங்க சாம்பியன் தமிழமுதன், 9 வயதுக்குட்பட்ட பிரிவில் உலக நம்பர் 1 இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். மேலும், 2000 Elo ரேட்டிங் புள்ளிகளைக் கடந்த உலகின் மிக இளம் வயது வீரர் என்ற சாதனையைப் அவர் படைத்துள்ளார். தன்னுடைய 4-ம் வயதில் உறவினர்கள் மூலம் செஸ் கற்றுக்கொண்ட தமிழமுதன், தொடர் பயிற்சியால் சிறந்த செஸ் வீரராக உருவெடுத்துள்ளார்.


