News June 14, 2024
உரிமைத் தொகை ₹1000 புதிய பயனாளிகளுக்கு சிக்கல்

இம்மாத மகளிர் உரிமை தொகை நாளை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதில், புதிதாக 2.30 லட்சம் பேர் வரை இணைக்கப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. எனினும், ஜூலை 10இல் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. ஜூலை 13 வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளதால், அதன்பின்னரே புதிய நபர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
Similar News
News March 3, 2026
இலவசமாக வேலைக்கு ஆள்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

‘ஆள்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை இந்த படிவத்தை <
News March 3, 2026
இன்னும் கூட்டணி அமைக்கவில்லை: ராமதாஸ்

நமக்கான வாகனம் இதோ அருகில் வந்துவிட்டது; அதில்தான் பயணிக்க இருக்கிறோம் என்று கடந்த வாரம் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் மூலம் <<19233839>>ராமதாஸ் <<>>கூட்டணியை உறுதி செய்திருந்தார். இந்நிலையில், தற்போதுவரை யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை எனக்கூறி, அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும், அடுத்த 3 நாள்களில் யாருடன் கூட்டணி என்பது உறுதி செய்யப்படும் எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
News March 3, 2026
காங்கிரஸுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மு.க.ஸ்டாலின்

திமுக – காங்கிரஸ் இடையிலான மோதலுக்கு கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக தொகுதிகளை கேட்டு அடம்பிடித்த காங்கிரஸுக்கு 25 மட்டுமே தரமுடியும் என திமுக பேச்சுவார்த்தை குழு கூறிவிட்டது. இதனால், கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கார்கே அறிவுறுத்தலின்படி ப.சிதம்பரம் நடத்திய பேச்சுவார்த்தையில், 29+1 சீட்டுகள் வரை கொடுக்க ஸ்டாலின் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.


