News June 14, 2024

22ஆம் தேதி தவெக மாநாடு தேதியை அறிவிக்கும் விஜய்?

image

வருகிற 22ஆம் தேதி நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் 50ஆவது பிறந்த நாள் ஆகும். கட்சியை ஆரம்பித்தது முதல் அறிக்கை மட்டுமே வெளியிடும் விஜய், தனது பிறந்த நாளன்று கட்சி மாநாடு எங்கு, எப்போது நடைபெறும் என அறிவிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மதுரை, திருச்சி, கடலூர் ஆகிய 3 இடங்களை அவர் பரிசீலிப்பதாகவும், இதில் ஏதேனும் ஓரிடத்தில் தவெக மாநாடு நடத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Similar News

News March 11, 2026

கருணை கொலை செய்ய அனுமதி வழங்கியது SC

image

4-வது மாடியில் இருந்து விழுந்ததால் 13 ஆண்டுகளாக கோமாவில் இருந்த ஹரிஷ் ரானாவை (31) கருணைக்கொலை செய்ய SC அனுமதித்துள்ளது. இவரது உடல்நலனில் முன்னேற்றமும் இல்லை என டாக்டர்கள் கூறிய நிலையில், கண்ணியமான முறையில் கருணைக்கொலை செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் கருணைக்கொலை தொடர்பான சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்குமாறும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

News March 11, 2026

1960-ல் ஒரு LPG சிலிண்டரின் விலை எவ்வளவு தெரியுமா?

image

கடந்த 60 ஆண்டுகளில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. 1960-ல் ₹10 வரை மட்டுமே இருந்த விலை, 2026-ல் ₹928-ஐ எட்டியுள்ளது. 1990-ல் ₹120 ஆகவும், 2010-ல் ₹400 ஆகவும் இருந்த விலை, இன்று சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய சுமையாக மாறியுள்ளது. சர்வதேச எரிபொருள் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள், மாறிவரும் மானியக் கொள்கைகள் மற்றும் பணவீக்கம் காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

News March 11, 2026

நாட்டை மட்டுமில்லை.. வீட்டையும் பாத்துக்கணும்: CM

image

TN-ல் இருந்து குடிமைப் பணிகள் (UPSC) தேர்வில் வென்ற 60 பேரை ’ரியல் ஹீரோஸ்’ என CM ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதற்கான பாராட்டு விழாவில் பேசிய அவர், அதிகாரத்தில் உள்ளவர்கள் நாட்டை மட்டுமல்ல, வீட்டையும் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். மேலும், UPSC பயிற்சி பெற முன்பு டெல்லி செல்லும் நிலை இருந்ததாகவும், ஆனால், ‘நான் முதல்வன்’ திட்டத்தால் அந்நிலை மாறியிருப்பதாகவும் பேசியுள்ளார்.

error: Content is protected !!