News June 14, 2024
நெல்லை காங்., தலைவர் மரணம்; சிபிசிஐடி விசாரணை

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த மாதம் 4ஆம் தேதி கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், நேற்று ஜெயக்குமார் உடல் கிடந்த கரைச்சுத்துப்புதூர் தோட்டத்தில் பிற்பகல் 3 மணி முதல் 5.20 மணி வரை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து, குடும்பத்தின மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
Similar News
News March 3, 2026
திருநெல்வேலி: மாதம் ரூ.3,000 ..! இந்த கார்டு உள்ளதா?

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <
News March 3, 2026
நாங்குநேரி கொலை தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

நேற்று நான்குநேரியில் இரண்டு பேர் அருவாளால் வெட்டி படுகொலை நடந்தது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் பாளையம்கோட்டை எஸ் பி அலுவலகத்தில் நடை பெற்று வருகிறது. காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் சட்டம் ஒழுங்கு மகேஸ்வர் தயாள், தென் மண்டல காவல்துறை தலைவர் ஐஜி விஜயேந்திர பிதாரி திருநெல்வேலி சரக டி ஐ ஜி சரவணன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் தலைமையில் தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
News March 3, 2026
நெல்லை: பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? – விஜய்

நாங்குநேரி அருகே 9 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களால் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்து 5 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைவெறித் தாக்குதலை கண்டித்து, உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாகவும், திமுக ஆட்சியை மக்கள் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நிராகரிப்பார்கள் எனவும் தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு.


