News June 14, 2024
பாஜகவில் மீண்டும் செல்வாக்கு பெறும் கே.டி. ராகவன்?

தமிழக பாஜகவில் வீடியோ அழைப்பு சர்ச்சையால் ஓரங்கட்டப்பட்ட கே.டி. ராகவன், தேர்தலில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என புள்ளி விவரங்களுடன் டெல்லி மேலிடத்துக்கு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது. அதுபோலவே தேர்தல் முடிவு அமைய அவரை மேலிடத் தலைவர்கள் சிலர் அழைத்து பேசியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் மாநிலத் தலைமை மாற்றப்பட்டால், அவர் பெயரும் பரிசீலிக்கப்படும் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
Similar News
News March 2, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 2, மாசி 18 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சதுர்தசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
News March 2, 2026
22,195 பணியிடங்கள்.. இன்றே கடைசி வாய்ப்பு

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 22,195 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். கணினி வழித் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். 10-ம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ₹18,000 வழங்கப்படும். இந்த <
News March 2, 2026
யானை நெருஞ்சில் மூலிகையின் பயன்கள்!

சிறுநீரக கல் உள்பட உடலின் பல பிரச்னைகளை யானை நெருஞ்சில் மூலிகை தீர்க்கும் என கூறப்படுகிறது. இதன் இலை, வேர், தண்டு அனைத்தும் மருத்துவ குணம் கொண்டதாகும். யானை நெருஞ்சிலை வேருடன் பிடுங்கி 1 லிட்டர் நீரில் கொதிக்கவிட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி 50 மில்லி அளவில் வாரத்திற்கு 4-5 முறை குடிக்கலாம். இதனால் ஆண்களுக்கு விந்தணு குறைபாடு நீங்குமாம். பெண்களுக்கு வெள்ளைப்படுதல், பால்வினை தொற்றுகள் குணப்படுமாம்.


