News June 14, 2024
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 வட்ட வழங்கல் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பம் செய்யலாம். இதற்கான முகாம் நாளை ஜூன் 15ஆம் தேதி நடக்கிறது. பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 2, 2026
சோளிங்கர்: முட்டிபோட்டு மலை ஏறிய திமுக பிரமுகர்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வர வேண்டி, சோளிங்கரில் திமுக பிரமுகர் விஜய் சாஸ்திரி முட்டிப் போட்டு மலை ஏறி வினோத வழிபாடு நடத்தினார். சோளிங்கர் மத்திய ஒன்றிய திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் விஜய் சாஸ்திரி, நேற்று (மார்ச் 1) சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் மலைக் கோயிலின் 405 படிகளையும் முட்டிப் போட்டு ஏறிச் சிறப்பு வழிபாடு செய்தார்.
News March 2, 2026
வாலாஜா அருகே தூக்கிட்டு தற்கொலை!

ராணிப்பேட்டை: வாலாஜா தாலுகா அம்மூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(49). வேலம் உயர் நிலைப் பள்ளி அலுவலரான இவருக்கு விஜயா(35) என்ற மனைவியும். எத்தீஷ்(10) என்ற மகனும், இனியா(8) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால் செந்தில் குமார், மன வேதனையில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், தனியார் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News March 2, 2026
அரக்கோணத்தில் ஒருவர் மீது குண்டாஸ்!

ராணிப்பேட்டை: அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து, சட்டவிரோதமாக மதுபான விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட முத்து(36) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், போலீஸ் சூப்பிரண்டு அய்மன் ஜம்மாலின் பரிந்துரையின் படி, முத்துவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சந்திரகலா உத்தரவிட்டார்.


