News June 14, 2024
தனுஷுக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு

சென்னை போயஸ் கார்டனில் நளினா ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான பங்களாவில், வாடகைக்கு குடியிருந்த அஜய்குமார் லுனாவத் என்பவரை, உடனடியாக வீட்டை காலி செய்து தரக் கூறி மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கை, உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. நேற்று நடந்த விசாரணையில் தனுஷ் காணொலி வாயிலாக ஆஜராகியிருந்தார். அப்போது, இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
Similar News
News March 3, 2026
தஞ்சை: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய அரசு நிறுவனமான BSNL-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 3, 2026
திமுகவா.. அதிமுகவா? கிருஷ்ணசாமி ஆலோசனை

2026 தேர்தல் தொடர்பாக மார்ச் 5-ம் தேதியன்று புதிய தமிழகம் கட்சி ஆலோசனை நடத்தவுள்ளது. 10+1 சீட்களை அதிமுக கூட்டணியில் கேட்டுள்ளதால் இழுபறி நீடிக்கிறதாம். அதேநேரம், திமுகவுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 + 1 என திமுக ஆஃபர் அளிப்பதாகவும், இதுகுறித்தே மார்ச் 5-ல் ஆலோசனை நடைபெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உங்கள் கருத்து என்ன?
News March 3, 2026
வியர்க்குருவுக்கு ‘பவுடர்’ யூஸ் பண்றது சரியா?

சம்மர் சீசனில், வாட்டி வதைக்கும் வியர்க்குருவை சமாளிக்க பலரும் வியர்க்குரு பவுடர்களை பயன்படுத்துகின்றனர். அந்த பவுடர்களில் menthol, camphor, zinc oxide போன்றவை இருக்க வேண்டும். இவற்றால், வியர்வை கொஞ்சம் உறிஞ்சப்படும். ஆனால், இந்த பவுடர் நிரந்தர நிவாரணம் அளிக்காது. ஆனால், இந்த பவுடரை அதிகமாக பயன்படுத்தினால், வியர்வை நாளங்களை அடைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.


