News June 14, 2024

இன்றுடன் முடிகிறது மீன்பிடி தடை காலம்

image

இன்று நள்ளிரவு முதல் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். கடலில் மீன்கள் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக கடந்த ஏப்.15ஆம் தேதி தொடங்கிய மீன்பிடி தடை காலம் 61 நாள்களுக்குப் பின் இன்றுடன் நிறைவடைகிறது. தொடர்ந்து, ஆழ்கடலுக்கு செல்ல மீனவர்கள் படகுகளைத் தயார் செய்து வருகின்றனர். இதனால், 2 மாதங்களுக்குப் பிறகு மீன்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News September 6, 2025

PAK உடனான போட்டியை புறக்கணிக்காதது ஏன்?

image

ஆசிய கோப்பையில் PAK உடனான போட்டியை இந்தியா புறக்கணிக்காதது குறித்து BCCI மவுனம் கலைத்துள்ளது. மத்திய அரசு வகுத்துள்ள கொள்கைகளின் படி சர்வதேச, பல தரப்பு போட்டிகளில் மட்டுமே IND அணி விளையாடுவதாகவும், PAK உடனான இருதரப்பு போட்டிகளில் விளையாடாது என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும், சர்வதேச போட்டிகளில் விளையாடாவிட்டால், இந்தியா மீது தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News September 6, 2025

நாளை சந்திர கிரகணம்.. பண மழை கொட்டும் 4 ராசிகள்

image

நாளை (செப்.7) நிகழும் சந்திர கிரகணத்தால் 4 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். *மேஷம்: புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சொத்து பிரச்னை தீரும். *ரிஷபம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிதிநிலை மேம்படும்.(ஆனால் கவனம் தேவை). *கன்னி: தொழிலில் நல்ல வளர்ச்சி அடைவீர்கள். வாழ்வின் தடைகள் நீங்கும். *தனுசு: திடீர் பண ஆதாயம் கிடைக்கும். நிதி சிக்கல் தீரும்.

News September 6, 2025

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் EPS-க்கு கடிதம்

image

அதிமுகவில் இருந்து தங்களையும் நீக்கக் கோரி, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் EPS-க்கு கடிதம் எழுதியுள்ளனர். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளனர். இதில் முன்னாள் MP சத்தியபாமா மற்றும் IT பிரிவு செயலாளர் செந்தில்குமார் ஆகியோரும் அடக்கம். முன்னதாக, கட்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறி செங்கோட்டையனை EPS பொறுப்பில் இருந்து நீக்கினார்.

error: Content is protected !!