News June 14, 2024
திருச்சி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடன் உதவி

சிறுபான்மையினருக்கு கடன் வழங்க டாம்கோ மூலம் நிகழாண்டு ரூ.2.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிறுபான்மையினா் பயனடையும் வகையில் டாம்கோ திருச்சி மாவட்டத்துக்கு இந்தாண்டுக்கு ரூ. 2.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டாம்கோ திட்டங்களுக்கு 18 வயது ஆனவராகவும் , 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
Similar News
News March 4, 2026
திருச்சி: இங்கெல்லாம் இன்று மின்தடை!

திருச்சி மாவட்டத்தில் இன்று (மார்ச்.4) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக கம்பரசம்பேட்டை, சத்திரம் பேருந்து நிலையம், வானப்பட்டறை, முருங்கப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், சோழ ராஜபுரம், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரி நகர், காஜா நகர், ஆர்.எஸ்.புரம், குளவாய்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!
News March 4, 2026
திருச்சி: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு

திருச்சியில் செயல்பட்டு வந்த எல்பின் நிதி நிறுவனம், பண மோசடி செய்ததாக 8,441 பேர் புகார் அளித்திருந்தனர். அவர்களில் இதுவரையில் 3942 பேர் மட்டுமே பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி வழக்கு தொடர்புடைய ஆவணங்களை ஆஜர் செய்துள்ளனர். மீதமுள்ள நபர்கள் உரிய ஆவணங்களுடன், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி, வாக்குமூலம் வழங்க வேண்டும் என துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News March 3, 2026
திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

திருச்சி மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் இணைந்து, மோப்பநாய் உதவியுடன் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். பயணிகளின் உடைமைகள், நடைமேடைகள், பார்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. வெளி மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றது.


