News June 14, 2024

13 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

image

மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், தமிழகம் முழுவதும் 13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். ரீட்டா ஹரீஸ், நந்தகுமார், நாகராஜன், சிகி தாமஸ் வைத்யன், சரவணவேல்ராஜ், விஜயராஜ்குமார், அன்பழகன், பிரஜேந்திரா நவ்நீத், சமீரன், சிவகிருஷ்ணமூர்த்தி, பூஜா குல்கர்னி, அலர்மேல்மங்கை, லலித் ஆதித்யா நீலம் ஆகியோர் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.

Similar News

News September 11, 2025

அதிமுகவின் முடிவுகளை அமித்ஷா எடுப்பாரா? ஆ.ராசா

image

பாஜகவிடம் அதிமுக மண்டியிட்டு விட்டதாக ஆ.ராசா விமர்சித்துள்ளார். அதிமுகவில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை அமித் ஷா முடிவு செய்வாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்து பேசியது ஏன் என்று கேட்ட அவர், தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடகு வைக்க அதிமுக துடிப்பதாகவும் சாடியுள்ளார்.

News September 11, 2025

இந்தியாவிற்குள் ஊடுருவும் நேபாள கைதிகள்?

image

கடந்த 24 மணி நேரத்தில் நேபாள சிறைகளில் இருந்து 13,572 கைதிகள் தப்பியுள்ளதாக அந்நாட்டு போலீசார் அறிவித்துள்ளனர். அவர்களில் பலர் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளாகவும், குற்றங்களில் ஈடுபட்டு வருபவர்களாகவும் இருக்கின்றனர். நேபாளத்தின் இன்றைய நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, சிறை கைதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதால், அது நாட்டில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

News September 11, 2025

டாலருக்கு மாற்றாக உள்ளூர் கரன்சியில் வர்த்தகம்: PM மோடி

image

இந்தியா – மொரிஷியஸ் இடையேயான வர்த்தகத்தை, அமெரிக்க டாலருக்கு பதிலாக, அந்தந்த நாடுகளின் கரன்சியில் மேற்கொள்வது பற்றி விவாதிக்கப்படும் என PM மோடி தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள மொரிஷியஸ் PM நவீன்சந்திர ராம்கூலத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், மொரிஷியஸின் தேவைகளை கருத்தில் கொண்டு, சிறப்பு பொருளாதார தொகுப்பை வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!