News June 14, 2024
தர்மபுரியில் பொது ஏலம் அறிவிப்பு

தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் பயன்பாட்டில் இருந்த வாகனம் கழிவுநீக்கம் செய்யப்பட்டு வரும் 21ஆம் தேதி அன்று முற்பகல் 11 மணியளவில் தருமபுரி மாவட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் பொதுஏலம் விடப்படுகிறது. எனவே ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் முன்வைப்புத் தொகை வங்கி வரைவு செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
Similar News
News August 27, 2025
1,341 இடங்களில் சிலை வைக்க அனுமதி

தர்மபுரி சப்-டிவிஷனில் அரூர் – 349, பென்னாகரம் – 294, பாலக்கோடு – 355, என மாவட்டத்தில் 1,341 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் சார்பில் 1,241, பா.ஜ., சார்பில் 42, ஹிந்து முன்னணி 25, ஆர்.எஸ்.எஸ்., 31, ஹிந்து மக்கள் கட்சி, விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் தலா ஒரு இடத்தில் என விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடக்க உள்ளது.
News August 27, 2025
இந்த விநாயகர் சதுர்த்தியை way2news உடன் கொண்டாடுங்கள்

உங்கள் பகுதியில் வைத்திருக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலையை ஊர் அறிய செய்ய அருமையான வாய்ப்பு. அலங்கரித்து வைப்பட்டுள்ள விநாயகர் சிலையை தெளிவாக புகைப்படம் எடுத்து நம்ம way2newsல் பதிவிடுங்கள். எப்படி பதிவிடுவது என்பதை <
News August 26, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.26) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக ராஜாசுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.