News June 14, 2024
நாமக்கல் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் வரும் 15.06.2024-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நாமக்கல், இராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News August 27, 2025
நாமக்கல்: மாணவிகள் வீடுகளில் ஆட்சியர் விழிப்புணர்வு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நேற்று(ஆக.26) எலச்சிபாளையம் ஒன்றியத்தில் உயர்வுக்குப்படி வழிகாட்டுதல் நிகழ்ச்சியின் மூலம், உயர்கல்வியில் சேராத மாணவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களின் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் மாவட்ட கல்வி அலுவலர்கள் இருந்தனர்.
News August 26, 2025
நாமக்கல் மாணவர்களே முக்கிய அறிவிப்பு!

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில், வரும் (28-08-2025) வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ‘உயர்வுக்கு படி’ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கல்விக்கடன், கல்லூரி சேர்க்கைக்கு தேவையான சான்றிதழ்கள், உதவித்தொகை விண்ணப்பித்தல், உள்ளிட்ட வாய்ப்புகள் செய்து தரப்படுகிறது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!
News August 26, 2025
நாமக்கல் நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேரங்களில் நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று (ஆக.26) நாமக்கல் – ராஜ்மோகன் (9442256423), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498209252), பள்ளிபாளையம் – பெருமாள் ( 9498169222), திம்மன்நாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் – செல்வராசு (9994497140) ஆகியோர் உள்ளனர்.